சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துவருகிறார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழிலதிபரின் மகனான விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது படங்களை இயக்கும் வேலைகளில் படு பிசியாக இருக்கிறார். ஆனாலும் தனது குழந்தைக்காக நேரத்தை செலவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இன்று சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மகனான வேதுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தன.
தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் நிலையில் நீச்சல் குளத்தில் குளிப்பதுபோல புகைப்படம் தேவைதானா. இவ்வளவு தண்ணீரை வீணடிக்கிறீர்களே என்று பலரும் விரக்தியில் அவருக்கு கமெண்ட் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த புகைப்படத்தை தற்போது அவர் நீக்கியுள்ளார். சர்ச்சையை ஏற்படுத்திய அந்த புகைப்படம் இதோ
