நீச்சல் குளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற நாய்.. நீண்ட நேரம் போராடி மீட்டெடுத்த மற்றொரு நாய்! மனதை உருக்கும் வீடியோ

அர்ஜென்டினாவில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற நாயை, மற்றொரு நாய் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் காப்பாற்றிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அர்ஜென்டினா நாட்டைச் சார்ந்த நபர் ஒருவர் சைபிரிங்ஹா மற்றும் லூனா (பார்வையற்ற நாய்) என இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வீட்டின் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் லூனா தவறி விழுந்துள்ளது. இதைக் கண்ட சைபிரிங்ஹா, லூனாவை இழுத்து மீட்கும் போது அது மீண்டும் குளத்திற்குள் விழுந்துள்ளது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் லூனாவை கழுத்தில் கவ்வி சைபிரிங்ஹா மீட்டுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அந்த நீச்சல் குளம் மூடப்பட்டதாக நாயின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.