சமீப காலமாக சீரியல் நடிகர் நடிகைக்குள் பல பிரச்சனைகள் வந்துகொண்டே தான் உள்ளது. அதை தடுக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல தொலைக்காட்சி பிரபலங்கள் தவறான பாதையை தேடி செல்கின்றனர். இது போன்று பல தவறான முடிவையும் ஒரு சில தொலைக்காட்சி பிரபலங்கள் முன்பே எடுத்துள்ளது நமக்கு தெரிஞ்ச விஷயம் தான்.பிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் வேறொரு சீரியல் நடிகையுடன் தொடர்பு வைத்துள்ளதால் மனரீதியாக பாதிக்கப்பட்டு, நேற்றைய தினத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் .

அப்படி செய்வதற்கு முன்பு பிக்பாஸ் போட்டியாளரான ரேஷ்மாவிற்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்று அனுப்பியுள்ளார். ஜெயஸ்ரீ குறித்து ரேஷ்மா பல தகவல்களை வெளியிட்டுள்ளார். மிகவும் மனநலம் பாதிக்கப்பட்டு காணப்படுவதாகவும், தன்னை தீத்துக்கட்ட பார்க்கிறார்கள் என்றும் தனது குழந்தையை மட்டும் பத்திரமாக பாத்துக்கோ என்றும் என்று அடிக்கடி கூறிக்கொண்டே இருக்கின்றார் என்று கூறியுள்ளார்.
ஜெயஸ்ரீ-யின் நிலை மோசமாகவே இருப்பதாகவும், நேற்றைய தினத்தில் காரில் சென்று கொண்டிருக்கும் போது இரண்டு பேர் அவரது காரை இடித்துவிட்டு, தகராறு செய்ததுடன், காரை கொடுத்துவிட்டு போ என்று வழிமறித்து சண்டையிட்டதாகவும் ரேஷ்மாவிடம் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். இந்த சம்பவமானது தற்போது மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.