நியூ லுக்கில் மீண்டும் போட்டோ ஷூட் செய்த நடிகை ரித்விகா.. புகைப்படங்கள் இதோ

மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர் ரித்விகா. அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். நடிகை ரித்விகா இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது. இதுவரை வந்த பிக்பாஸ் சீசன்களில் ரசிகர்களுக்கு பலரை பிடித்திருக்கும். ஆனால் ஒட்டுமொத்த மக்களால் ரசிக்கப்பட்டவர் நடிகை ரித்விகா. இரண்டாவது பிக்பாஸ் சீசனில் அவர் டைட்டிலை வெற்றிபெற்றது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு சொல்லும்படியான படங்கள் வரவில்லை என்றே கூறலாம்.

இந்த லாக் டவுன் காலத்தில் ரித்விகா போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்தியுள்ளார். இப்போது அவர் புதிய போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார். அதில் ரித்விகா இதுவரை இல்லாத லுக்கில் மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ போட்டோ ஷுட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்,

Leave a Reply

Your email address will not be published.