செம ஸ்டைலிஷ்ஷாக மாறிய நடிகர் சூர்யா!! இணையத்தில் வைரலாகும் நியூலுக் புகைப்படம்..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர் நடிகர் சூர்யா. சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். இவரின் தம்பி கார்த்தி விவசாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார். ஆரம்பத்தில் நடிப்பு, நடனம் சரியாக வரவில்லை என்று விமர்சனம் செய்யப்பட்டார். அந்த விமர்சனத்திற்கு தன்னுடைய கடின உழைப்பு மூலம் எல்லோருக்கும் பதிலடி கொடுத்துவிட்டார்.

இப்போது இவரை பார்த்தே வளர்ந்து வரும் பிரபலங்கள் நடிப்பு கற்றுக் கொள்ளலாம், அந்த அளவிற்கு வளர்ந்துள்ளார். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் வெளிவருவதாக இருந்தது. ஆனால் கொரானா தாக்கம் காரணமாக திரையரங்கம் அனைந்தும் மூடப்பட்டதால், இந்த படம் தற்போது சற்று தள்ளிப்போய் இருக்கிறது.

பென்குவின், பொன்மகள் வந்தால் படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ஓடிடி தளத்தில் அடுத்த மதம் வரவிருக்கிறது. இப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பாக்க பாட்டுவருகிறது. சூர்யாவின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அது நம்ம நடிகர் சூர்யா என்ற அளவிற்கு ஆளே மாறியுள்ளார். ஸ்டைலிஷ்ஷான ஹேர் கட், தாடி என பார்க்கவே வேறொரு லுக்கில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.