எத்தனை முறை விழுந்தாலும் தனது ரசிகனால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சிம்பு. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். லவ் ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் சிம்பு. தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். சிம்புவின் மாநாடு படம் வரும் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. சிம்பு தமிழ் சினிமா மக்கள் கொண்டாடும் பிரபல நடிகர்.

அடுத்தடுத்து படங்கள் கொடுத்து ஜெயித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு நடுவில் இவரது படங்கள் செய்யும் சாதனையே வேறு. இவர் சந்திக்காத பிரச்சனைகள், சர்ச்சைகள் இல்லை, ஆனால் கடைசி வரை தனது ஆசை நாயகன் என்று அவருடனேயே இருந்தார்கள் ரசிகர்கள். தற்போது சிம்பு இந்த லாக் டவுன் காலத்தில் தனது உடல் எடை குறைத்து பிட்டாக மாறிவிட்டார்.
புதிய லுக்கில் சிம்பு செமயாக இருப்பதாக ரசிகர்களும் கூறி வருகின்றனர். அண்மையில் அவர் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது முகத்தை முழுவதும் மூடிக் கொண்டிருந்து வந்திருந்தார். ஆனால் அவரது ஹேர் ஸ்டைல் புதிதாக இருந்தது. அதைப் பார்த்த ரசிகர்கள் தலைவன் ஈஸ் பேக் என கொண்டாடி வருகிறார்கள்.
Thalaivan Back ❤️?? Idhukku thaan ya ivlo naal Wait Pannittu irundhom ? ? #SilambarasanTR #Simbu #STR @DEEPU_S_GIRI @STR_360 @itsvignesh_ @SimbuTalkies @MahatOfficial @iamharishkalyan @sureshkamatchi pic.twitter.com/XbRaItm1Zp
— ✌☢ Ĺ??şH?ⓐ?_Ŝ?R ✌♡ (@Lachu_STRian) October 9, 2020