நித்யாவின் கள்ளத்தொடர்பை பற்றி பல உண்மைகளை அம்பலபடுத்திய பாலாஜி.. சர்ச்சையான தகவல்..!

காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்தியா இருவரும் கடந்த ஆண்டு ஏற்றப்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். மேலும் நித்தியா இனி கணவருடன் வாழ போவதில்லை என முடிவு செய்து விவாகரத்து பெற நீதி மன்றத்தை நாடினார். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நித்தியா பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் இருந்து வந்த அழைப்பை ஏற்று கொண்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் செல்வதை அறிந்து, தாடி பாலாஜியும் மனைவியை சமாதான படுத்துவதற்காக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது நாம் அறிந்தது தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் இருவரும் சமாதானம் ஆகி, மீண்டும் தங்களுடைய வாழ்க்கையை துவங்குவார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன் மீண்டும் தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில்… தாடி பாலாஜி தன்னையும் தனது மகளையும் மிரட்டுவதாகவும், குடித்துவிட்டு நண்பர்களுடன் வந்து கதவு, ஜன்னல்களை உடைத்து தொல்லை கொடுப்பதாகவும் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் போலீசார் முன் ஆஜரான தாடி பாலாஜி இந்த புகார் குறித்து விளக்கம் கொடுத்ததாக கூறப்பட்டது.

இதைதொடந்து தற்போது இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து, தன்னுடைய பக்கத்தில் இருக்கும் நியாயம் பற்றியும், நித்தியாவை இப்படி ஆட்டி வைப்பவர் யார் என்றும் கூறியுள்ளார் தாடி பாலாஜி. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி நித்தியாவுடன் எனக்கு காதல் திருமணம் நடைப்பெற்றது. எங்களுக்கு போஷிக்கா என்ற பெண் குழந்தை உள்ளது. நித்யா உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக சென்ற இடத்தில் ஜிம் ஆலோசகர் பைசில் உடன் தொடர்பு ஏற்பட்டது. இதற்கு தீர்வுகாண காவல்துறை உதவியை நாடியுள்ளார்.


அப்போதுதான் காவல்துறை உதவி ஆய்வாளர் மனோஜ்குமாரின் தொடர்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட மனோஜ்குமார் நித்யாவிடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் மனோஜ்குமார் என்று தாடி பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறை உதவி ஆய்வாளர் மனோஜை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மனோஜ்குமார் மற்றும் நித்யாவால் என் மகள் போஷிக்காவின் உயிருக்கு ஆபத்து உள்ளது. போஷிக்காவை போர்டிங் பள்ளியில் சேர்த்தால் மட்டுமே அவர் நலமுடன் இருப்பார், மேலும் அதுவே அனைத்திற்கும் தீர்வாகவும் அமையும் என்று அவர் தெரிவித்தார்.

என் அம்மாவுடன் தான் இருந்தேன் மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பாலாஜி. கடந்த இரண்டு வருடங்களை நான் என்னுடைய அம்மாவின் வீட்டில் தான் வசித்து வருகிறேன். நித்தியா இருக்கும் வீட்டிற்கு செல்லவில்லை என கூறினார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு கூட நான் என் அம்மாவீட்டுக்கு தான் சென்றேன். தன்னை பணத்திற்காக மட்டுமே நித்தியா பயன்படுத்திக்கொள்கிறார் என குற்றம் சாட்டினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரே வாரத்தில், 60000 ரூபாய் நித்தியாவிற்கு பணம் கொடுத்துள்ளதாகவும். அதுவும் நான் சென்று கொடுக்க வில்லை நண்பர் மூலமாகவே அவரிடம் கொடுத்ததாக கூறினார். மேலும் போஷிக்கவின் பிறந்த நாள் அன்று குழந்தையை அழைத்து வருவதாக கூறி, பின் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி குழந்தையை கூட கண்ணில் காட்ட வில்லை என ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!