நிஜத்திலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாக்கு குழந்தை பிறந்தாச்சு..! என்ன குழந்தை தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனியாக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நாடகத்தில் முல்லை, மீனா, தனம், ஜீவா, கதிர் என அதில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். மீனா கதாபாத்திரத்தில் வரும் ஹேமா வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இத்தொடரில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஹேமா ராஜ் கர்ப்பமாக இருந்தார். நிஜத்தில் உள்ளது போலவே சீரியலிலும் அவரது கேரக்டர் கர்ப்பமாக காட்டப்பட்டுள்ளது. மீனாவின் சீமந்தம் மிகவும் சிம்பிளாக வீட்டிலேயே நடந்துள்ளது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளைகாப்பு எபிசோடுகள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு பாண்டியம்மாள் பொறந்தாச்சு என்று அவர் நடித்து வரும் மீனா கதாபாத்திரத்திற்கு தான் குழந்தை பிறந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வேலையில் தான் மீனா என்கிற ஹேமாவிற்கு நிஜத்திலும் குழந்தை பிறந்திருக்கிறது. அவருக்கு மகன் பிறந்துள்ளானாம். சீரியல் நாயகி சித்ரா இந்த தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.