நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளிய புதிய வீடியோ.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல் ஹாசனின் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக துவங்கவிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் இதுவரை வெற்றிகரமாக மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மூன்று சீசன்களை முடித்த பிரபல டிவியில் தற்போது நான்காவது சீசனை தொடக்கவுள்ளது. இந்நிலையில், நான்காவது சீசன் துவங்கும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.

பிக்பாஸ் 4வது சீசன் தெலுங்கில் எப்போதோ தொடங்கிவிட்டது. டிஆர்பியிலும் அந்நிகழ்ச்சி புதிய சாதனை செய்துள்ளதாக அவர்களே விவரம் வெளியிட்டனர். தமிழில் நாளை (அக்டோபர் 4) மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்காக பல ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் குழுவினரும் கடந்த 5 நாட்களாக இன்னும் இத்தனை நாள் தான் பிக்பாஸ் தொடங்க என வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்களுக்கு ஒரு சின்ன குழப்பம், பிக்பாஸ் குழுவினர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டீவ் என்று செய்தி வந்ததே உண்மையோ, நிகழ்ச்சி ஆரம்பமாகுமா என்ற சந்தேகம். ஆனால் நாளை நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில் பிக்பாஸ் குழுவினர் இந்த வீடியோ வெளியிட்டிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.