பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் சென்ற வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், என்பது அனைவரும் அறிந்ததே. முதல் வாரம் அனிதா சுரேஷ் சக்கரவர்த்தி இடையே மோதல் ஏற்பட்டது. இரண்டாம் வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி ரியோ ராஜ் இடையே மோதல் ஏற்பட்டாலும்.
கேபிரியால தலைவர் போட்டிக்கு நின்றபோது சுரேஷ் செய்த காரியத்தால் அனைவராலும் பாராட்டப்பட்டார். இதில் பலராலும் கவனத்தை ஈர்க்கப்பட்டவர் சுரேஷ் சக்ரவத்தி. பிறரை சீண்டுவதால் சில நேரம் கெட்டவராகவும், சிலருக்கு உதவியதால் சில நேரத்தில் நல்லவராகவும் தெரிகிறார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், போட்டியில் சுவாரசியம் குறைவாக காணப்பட்ட போட்டியாளரான நடிகை ரேகா வெளியேறினார்.
பிக்பாஸ் அடுத்தடுத்து மிகவும் வித்தியாசமாக டாஸ்க் கொடுத்து நிகழ்ச்சியை அமர்க்களம் செய்து வருகிறார். ஆனால் இன்று வெளியான 2 ப்ரோமோக்களிலும் இவரை பற்றி நமக்கு பல விதமான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் எப்பிசோட்டின் 3ஆம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ‘நான் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை ‘ என கண்கலங்கி கூறுகிறார் சுரேஷ். இதோ 3ஆம் ப்ரோமோ..