“நான் இன்னும் சாகல, உயிரோட தான் இருக்கேன்”…. கண்ணீர் விட்ட சமந்தா…. கலங்கி போன ரசிகர்கள்….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனிடையே சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் அரிய வகை நோய் ஒன்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

அதாவது சமந்தாவிற்கு மையோ சிடிஸ் என்று அரிய வகை நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டி திரை உலகிநர் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் சமீபத்தில் சமந்தா மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் புகைப்படம் ஒன்றை மிகுந்த சோகமான முகத்தை வைத்துக்கொண்டு பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சமத்தா யசோதா திரைப்படத்தின் பிரமோஷன் காக ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் தனது உடல்நிலை குறித்து வரும் வதந்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கலக்கமடைய வைத்துள்ளது.

error: Content is protected !!