தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் நடிகருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருப்பவர் பாலிவுட் சினிமா நடிகை கங்கனா ரணாவத்.சில சர்ச்சைகளிலும் அவரின் பெயர் அண்மையில் அதிகமாக பேசப்பட்டது. இதனால் சில எதிர்ப்புகளும் அவருக்கு கிளம்பியது. இருந்த போதிலும் அவர் அதை சமாளித்து வருகிறார்.

ட்ராமா குயின் (2014) திரைப்படத்தில் ஒரு அப்பாவியாக நடித்ததற்காக ரணாவத் தொடர்ந்து சிறந்த நடிகைக்கான இரண்டு தேசிய விருதுகளையும், நகைச்சுவைத் திரைப்படமான தனு வெட்ஸ் மனு: ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் இரட்டை வேடத்தலையும் நடித்திருந்தார்.மணிகர்ணிகா என சரித்திர கதை இயக்கி நடித்திருந்தார். இந்நிலையில் அவர் அண்மையில் நீண்ட வருட போராட்டத்திற்கு முடிவுக்கு வந்த அயோத்தி ராமர் கோவில் சம்பவம் திரைப்படமாக எடுக்கப்போகிறாராம்.
இது குறித்து அவர் இப்படத்தில் தான் நடிக்கப்போவதில்லை எனவும், இயக்குவதில் தான் அதிக கவனம் செலுத்தப்போவதாகவும், சர்ச்சையான படமாக தான் இதை நினைக்கவில்லை எனவும், அன்பு, நம்பிக், ஒற்றுமையை வெளிப்படுத்தும் படமாக இக்கதை அமையும். எல்லாவற்றை கடந்து தெய்வீகத்தன்மை நிறைந்தது தான் இப்படம் என கூறியுள்ளார்.