உலக அளவில் நம் இந்திய கலச்சாதாரத்திற்கு என தனி அடையாளம் உண்டு. நம் தமிழ்நாட்டு கிராமங்களின் உயிர்நாடி நாட்டுப்புறக் கலைகள். இந்தப் பாரம்பரிய கலைகள் பேணிக் காக்கப்பட வேண்டியவை. ஆனால், இவை தற்போது வலுவிழந்து கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் அழியும் நிலையில் இருப்பது கவலையளிக்கும் ஒரு செய்தி. அது பற்றிய ஒரு விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல பல இளைஞர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் இப்போது நடக்கும் பள்ளி கல்லூரி மற்றும் பொது விழாக்களில் நமது நாட்டுப்புறக் கலைகள் இடம்பெற தொடங்கிவிட்டன. இப்படித்தான் சமீபத்தி ஒரு தமிழ் பெண் ஆடிய நாட்டுப்புற வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
நாட்டுப்புற பாடலுக்கு வேற லெவலில் நடனம் ஆடிய இளம்பெண்!! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ
