நள்ளிரவில் நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்!! இன்ப அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்.. குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகிப் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார் நயன்தாரா. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்திலும், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பின்போது நட்பாக மலர்ந்த இவர்களுடைய உறவு, மெல்ல வளர்ந்து படப்பிடிப்பு முடிவதற்குள் காதலாக வலுப்பெற்றது. கிட்ட தட்ட 5 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று அவரின் பிறந்தநாளை கொண்டாடுகின்றார். அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் காதலியான நயன்தாரா சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

அழகான கேக் மற்றும் இசை குழுவுடன் வீட்டை பல வண்ண விளக்குகளுடன் அலங்கரித்துள்ளார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது பகிர்ந்துள்ளார். இதேவேளை, ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *