பொதுவாக நடிகர் நடிகைகள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை முதலீடு செய்ய யோசிக்கும் முதல் வழி வீடு அல்லது வீட்டுமனைகளை அம்மா, அப்பா, தம்பி, தங்கை என குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் வாங்கி வைப்பது தான். அதன் பிறகு தான் வேறு தொழில்களில் முதலீடு செய்வார்கள். அந்த வகையில், தனது சம்பளத்தை கொண்டு அசையா சொத்துக்களை வாங்கி வாங்கி குவிப்பதில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா.

அந்த வகையில் கடந்த மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் ராவுரியாலா கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஏரி புறம்போக்கை ஒரு கும்பல் ஏமாற்றி விற்பனை செய்துள்ளது. அந்த நிறுவனத்தினடமிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு கோடி கொடுத்து நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி ஆகியோர் வாங்கி உள்ளனர்.
இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடையே எழுந்துள்ள மோதலால் இந்த விஷயம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நிலத்தை கையகப்படுத்தி வைத்திருந்த விவசாயிகளிடம் ஏக்கருக்கு 5 லட்சம் கொடுத்து வாங்கி அதனை ஒரு கோடிக்கு விற்று தனது பார்ட்டனர் மோசடி செய்து விட்டதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் சுதிர் ரெட்டி கூறியுள்ளார். இதனால், நயன்தாரா, மற்றும் ரம்யாகிருஷ்ணன் ஆகியோரின் சொத்துகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.