தமிழ் ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவர்களில் நடிகை குஷ்புவும் ஒருவர். அவரது ஜெராக்ஸ் போலவே இருப்பதால் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவர் நடிகை ஹன்சிகா. கொழுக், மொழுக்கென பார்ப்பதற்கு நச்சென இருக்கும் ஹன்சிகா திரைப்படத்துறைக்கு வரும் முன்பே இந்தி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

ஹென்சிகாவுக்கு 16வயது இருக்கும்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக தேசமுருடு படத்தில் நடித்தார். கடந்த 2007ல் இந்தப்படம் வெளியானது. தொடர்ந்து இரு இந்திப்படங்களிலும் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் என பிஸியாக வலம் வந்த ஹன்சிகாவுக்கும், நடிகர் சிம்புவுக்கும் காதல் எனவும் கிசு,கிசு கிளம்பியது. ஆனால் திடீரென காதலை பிரேக்கப் செய்தார் ஹன்சிகா. தமிழில் தனுஷின் ‘மாப்பிள்ளை’ படம் மூலம் அறிமுகம் ஆனார்.
தமிழில் கடைசியாக குலேபகாவலி படத்தில் நடித்த ஹன்சிகா அதன் பின்பு படம் எதுவிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் பட வாய்ப்பு இல்லாத கேப்பில் தன் உடல் எடையை நச்சென குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார் ஹன்சிகா. அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றும் தொடங்கிய ஹன்சிகா, சிம்புவுக்கு ஜோடியாக மாஹா என்னும் படத்திலும் நடித்துவருகிறார்.
குண்டாக கொழுக், மொழுக்கென இருக்கும் ஹன்சிகா இப்போது தன் உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக இருக்கிறார். உடல் எடையைக் கணிசமாக குறைத்த கையோடு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அடடே ஹன்சிகாவா இது? எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார் என ஆச்சர்யத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.
புகைப்படம் 1:
புகைப்படம் 2: