நம்பர்.1 இடத்தை பிடித்த தளபதி விஜய்யின் திரைப்படம்..!! ஒட்டுமொத்த டிஆர்பி யில் நம்பர் சாதனை..!!

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் தான் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய். விஜய் ஒரு இந்திய திரைப்பட நடிகர், நடனக் கலைஞர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து வருகிறார். உலக அளவில் இவருக்கு பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் காதல் படங்களில் நடிக்க ஆரம்பித்த விஜய் சில வருடங்களுக்கு முன்பு மாஸ் ஹீரோ போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார் நிலையில் இவருக்கு ரசிகர்கள் செல்லமாக இளையதளபதி விஜய் என்று அழைத்து வருகின்றனர். இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்றே அவரை சொல்லிவிடலாம். தளபதி விஜய் திரைப்படங்கள் வசூலில் சாதனை படைப்பது போல டிஆர்பி யிலும் சாதனை செய்து வருகிறது.

அந்த வகையில் இந்த லாக்டவுன் சமயத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படங்களில் இவரின் திரைப்படம் தான் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களில் டாப் 5 இடத்தை பிடித்த திரைப்படங்களை தான் பார்க்கவுள்ளோம். பைரவா – 15348, காஞ்சனா 3 – 15184, தர்பார் – 14593, கில்லி – 13469, சீமராஜா – 13456.

Leave a Reply

Your email address will not be published.