நந்தினி சீரியல் ஹீரோ ராகுல் ரவியின் மனைவியை பார்த்துள்ளீர்களா? வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்

தற்போது திரைப்படங்களை விட சின்னத்திரை தொடர்கள் அதிகளம் மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன என்றே சொல்லவேண்டும். புதிது புதிதான தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் தற்போது தொலைக்காட்சிகளை அலங்கரித்து வருகின்றன. இப்படி பத்து பதினைந்து படங்களில் நடித்தால் கிடைக்கும் புகழை விட தற்போது ஓரிரு சின்னத்திரை தொடர்களிலோ அல்லது சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்து கொண்டாலோ அந்த பெரும் புகழும் கிடைக்கிறது.

இப்படி தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளும் புதிய உச்சத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் நந்தினி. இயக்குனர் சுந்தர்.சியின் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது நந்தினி சீரியல். இதில் கதாநாயனாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் ராகுல் ரவி. இத்தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார் ராகுல்.

அதைத்தொடர்ந்து பாட்ஷா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் ‘சாக்லேட்’ தொடரிலும் நாயகனாக நடித்தார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. இந்நிலையில் முதல் முறையாக அவருடைய மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இருவருக்கும் அழகிய ஜோடிகளாக இணைந்திருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.