நண்பர்களுடன் வீடியோ கால் பேசிய விஜய்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் மற்றும் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் சினிமா உலகில் பல சாதனைகளை படைத்தது உள்ளார். தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் தளபதி விஜய். நடிகர் விஜய் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தின் ரிலிஸிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார். ஊரடங்கு காரணமாக தள்ளிப்போய்வுள்ளது.

நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பொதுவாக நண்பர்கள் ஒன்று கூடி வெளியே சென்று வருவதும் வாழ்த்துக்கள் கூறுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தற்போது நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஊரடங்கு காரணமாக அது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனால் பலரும், வீடியோ கால் மூலம் நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் குழந்தை பருவத்தில் இருந்து ஒரே நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார். அதில், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்ட அனைவருடனும் இன்று நண்பர்கள் தினத்தை கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே பரவிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *