நடுரோட்டில் மனைவி காட்டிய அட்ராசிட்டி! வேறொரு பெண்ணுடன் காரில் வந்த கணவரை தடுத்த மனைவி…தீயாய் பரவும் காட்சி

மும்பை நகரத்தின் பெட்டர் சாலை என்னும் பகுதியில் தம்பதி இருவர் இடையே நடைபெற்ற சண்டை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் டிராஃபிக் ஏற்பட்டுள்ளது. சாலையில் தனது கணவர் வந்த ரேஞ்ஜ் ரோவர் காரை தடுத்து நிறுத்திய அவரது மனைவி, காருக்குள் வேறு ஒரு பெண் இருப்பதாகவும், அவருடன் தனது கணவர் தவறான தொடர்பு வைத்துள்ளதாகவும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், காரின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அந்த பெண்ணை வெளியே இறங்கி வர சொல்லி ரகளை செய்துள்ளார். போக்குவரத்து தடை ஏற்படுத்தியதாக அந்த பெண்ணிற்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேற்கொண்டு புகார் எதுவும் பதிவு செய்யவில்லை. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!