நடிக்க வருவதற்கு முன்பு திரிஷா எப்படி இருப்பாங்கன்னு பாத்துருக்கீங்களா.? புகைப்படம் பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்..! நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட தாக்குப் பிடித்து நிற்கிறார்கள். ஆனால் ஹீரோயின்களின் காலம் அப்படி அல்ல. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல் சில ஆண்டுகள் மட்டுமே ஹீரோயின்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

இப்போதுதான் அதில் இருந்து மாறுபட்டு நயன் தாரா, த்ரிஷா போன்றோர் நீண்டகாலம் சினிமாவில் தாக்குப்பிடித்து வருகின்றனர். த்ரிஷா கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான பிரசாத், சிம்ரன் நடித்து மெகா ஹிட்டான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்திருந்தார்.

அப்படி தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன த்ரிஷா, ஷ்யாம் நடித்த லேசா லேசா படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். சாமி, கில்லி என இவர் நடித்த படங்கள் பல மெகா ஹிட் ஆகின.

தமிழுக்கு இணையாக தெழுங்கு சினிமாவிலும் அசத்தினார். இவர் சமீபத்தில் முதன்மை கேரக்டரில் நடித்த பரமபதம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போதும் ராங்கி, பொன்னியின் செல்வன் உள்பட சில படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் த்ரிஷா.

த்ரிஷா திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு உள்ள புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே த்ரிஷாவா இது? என ஆச்சர்யத்தோடு பகிர்ந்து வருகின்றனர்