தமழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா. அதன் பின்னர் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், தீய வேல செய்யனு குமாரு ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் முலைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை ஹன்சிகா. தமிழ் ரசிகர்களால் சின்ன குஸ்பு என்று கொண்டாடப்பட்டவர் ஹன்சிகா.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் இவர், தற்போது புது முக நடிகைகளின் வரவால் படவாய்ப்பு குறைந்து காணப்படுகின்றார். இந்நிலையில் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார் ஹன்ஷிகா. நடிகை ஹன்ஷிகாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தற்போது இவரது உடல் எடையை பார்க்கும் ரசிகர்கள் உடல் எடையை குறைக்க வேண்டியதுதான், ஆனால் அதற்காக இப்படி எலும்பும் தோலுமாகவா மாறுவது என மீண்டும் கலாய்க்க தொடங்கியுள்ளனர். மேலும் சிலர், நீங்கள் சற்று குண்டாக, கொளு கொளுவென இருந்தால்தான் பார்க்க நன்றாக இருப்பீர்கள், இந்த அளவிற்கு உடலை எடையை குறைக்க வேண்டாம் எனவும் அறிவுரை கூறிவருகின்றனர்.