சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற தொடர் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நடிகை ஸ்வர்ணமால்யா. அன்புள்ள சினேகிதி, தேக்கத்து பொண்ணு, வந்தாலே மகராசி, யாதுமாகி நின்றாள் என பல்வேறு தொடர்களிலும் நடித்துள்ளார் நடிகை ஸ்வர்ணமால்யா. இவர் ஓர் பயிற்சிப் பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் தனது 17 ஆவது வயதில் யுவகள பாரத் எனும் விருதைப் பெற்றார்.

இவர் பின்னர் சினிமாவில் நடிக்கவும் செய்தார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே என்ற படத்தில் படத்தின் நாயகி ஷாலினிக்கு அக்காவாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளியப்படுத்தினார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆனார் நடிகை ஸ்வர்ணமால்யா. தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழி படங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களில் நடித்த இவர் சில காலத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போனார். இதையடுத்து, இடைவெளிக்கு பிறகு ஒருசில சீரியல் தொடர்களில் நடித்துவந்த இவர் தற்போது முழுவதுமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். 90 ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவரான இவரது தற்போதைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.