நடிகை ஸ்ரீப்ரியாவின் மகளை பார்த்துள்ளீர்களா? இவ்வளவு அழகா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே

80, 90 களில் தமிழ் சினிமாவில் தன் சிறந்த நடிப்பால் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் ஸ்ரீ பிரியா. அந்த காலத்தில் ரஜினியுடன் 30 படங்கள் மற்றும் கமலுடன் 28 படங்கள் என பிரம்மாண்டமாக நடித்து அசத்தியவர் நடிகை ஸ்ரீபிரியா. ஸ்ரீதேவிக்கு போட்டியாக நடித்து வளர்ந்தவர் ஸ்ரீபிரியா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவருக்கும் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவருக்கும் 1988ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நாகார்ஜுன் என்ற மகனும், சினேகா என்ற மகளும் உள்ளனர். இதில் சினேகா தனது கல்லூரி படிப்பை லண்டனில் படித்தார். அங்கு வழக்கறிஞர் துறையில் பட்டம்பெற்று ஒரு வழக்கறிஞராக இருந்து வருகிறார் ஸ்நேகா. பல ஆண்டுகளாக மீடியா வெளிச்சம் படாமல் இருந்தார் ஸ்நேகா.

ஸ்ரீ பிரியா, தான் இயக்கிய “மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் பிரஸ் மீட் அன்றுதான் மகள் சினேகாவை அழைத்துவந்தார். அப்போது தன் மகளுக்கு நடிக்க விருப்பம் இல்லை என்றும், அவர் வழக்கறிஞராக வேண்டும் என்பது தான் அவரது ஆசை என்றும் அவர் கூறினார். அவர் மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *