ரிக்ஷா மாமா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் இளைய மகள் தான் ஸ்ரீதேவி. கதிரின் காதல் வைரஸ் என்ற காதல் படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இவர் பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நடித்து அனைவரின் மனங்களையும் கவர்ந்தார். என்றும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். மாதவன், தனுஷ், ஜீவா ஆகியோருடன் படத்தில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் அருண் விஜயின் சகோதரி ஆவார். இவருக்கும் தொழிலதிபர் ராகுல் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
தற்போது அவருக்கு ரூபிகா என்ற ஒரு பெண் குழந்தையுள்ளது. சிறுவயது குழந்தையாக ரூபிகாவை நாம் பார்த்திருப்போம். தற்போது ரூபிகா வளர்ந்துவிட்டார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து நடிகை ஸ்ரீதேவி சிறுவயதில் இருப்பதை போலவே அவரது மகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.