நடிகை ஷோபனா படப்பிடிப்பு தளத்திலேயே கதறி அழுத சோகம்!…. இதுவரை யாரும் அறியாத ரகசியங்கள்…

80 – 90 பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை ஷோபனா. நடிகை ஷோபனா திரைப்படங்களில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். தளபதி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காதலியாக முக்கியமான கதாபாத்திரத்தில் ஷோபனா நடித்திருந்தார். மேலும் “சிவா” படத்திலும் ஷோபனா நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் ஷோபனாவை பார்க்க வீட்டின் மேற்கூரையை திறந்துகொண்டு உள்ளே படுத்திருக்கும் ஷோபனாவின் கால்களை பிடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் ரஜினிகாந்த் அந்த காலை பிடிக்கும் காட்சியில் நடிக்க தயங்கியதால் அந்தக்காட்சியே வேண்டாம் என்று சொன்னார். மேலும் அவ்வாறு காலை பிடிக்கும் காட்சியில் நடித்தால் என்னுடைய ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பிடிவாதமாக ரஜினிகாந்த் இருந்ததாகவும், பின்னர் ஒரு வழியாக ரஜினிகாந்தை சமாதானப்படுத்தி அந்த காட்சியில் கால்களை பிடிப்பது போன்று படமாக்கப்பட்டதாகவும் கூறினார்.

சிவா படம் வெளியான பின்பு ரஜினிகாந்த் சொன்னதைப் போலவே அவரது ரசிகர்கள் சோபனாவின் காலை பிடிக்கும் அந்த காட்சியை விரும்பாத ரசிகர்கள் ” தலைவா நீ போய் அவளோட கால பிடிக்கலாமா ” என தியேட்டரில் அந்த காட்சி வரும்போது பலரது எண்ண ஓட்டங்களை வெளிப்படையாக கூறினார்கள் என்று இதுவரை யாரும் அறியாத பல சுவாரசியமான தகவல்களை ஷோபனா வெளிப்படுத்தி பழைய நினைவுகளை மீட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!