தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படம் நடிகர் தல அஜித். அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். நடிகை ஷாலினிக்கு ஷாம்லி என்று ஓர் தங்கை இருக்கிறார். ஷாம்லி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தார்.
இந்த படத்தில் அஞ்சலி என்ற குழந்தை கதாபாத்திரத்தில் படத்தில் ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்பதற்கான தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின்னர் தமிழில் துர்கா தைப்பூசம் செந்தூர தேவி என்று பல படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் குடும்பம் குழந்தைகள் என்று செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் அவர் வரைந்த புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஷாம்லி பற்றி நடிப்பு பற்றி பல விஷயம் தெரிந்தும் அவர் நன்றாக ஓவியம் வரைவார் என்பது பலரும் அறியாத ஒன்று. அவர் வரைந்த சில ஓவியங்களை நீங்களே பாருங்க. அவரின் திறமையை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.