நடிகை ஷாந்தினிக்கு டும் டும் டும், மாப்பிள்ளை யாரு தெரியுமா?

நடிகை ஷாந்தினிக்கு டும் டும் டும், மாப்பிள்ளை யாரு தெரியுமா? பிரபல நடிகையான ஷாந்தினிக்கு விரைவில் திரையுலக பிரபலத்துடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய பட்ஜெட் படங்களில் பொரும்பாலும்

நாயகியாக நடித்து வருபவர் ஷாந்தினி. மேலும் இவர் தற்போது வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாந்தினியும், வில் அம்பு, இரும்புத்திரை, பியார் பிரேமா காதல் உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த நந்தாவும் காதலித்து வந்துள்ளனர்.

தற்போது இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சை கோடி காட்டியதால் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. வருகிற டிசம்பர் 12-ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதன் பின்னர் டிசம்பர் 16-ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஷாந்தினிக்கு திருமணம் என தெரிந்ததும் அவரது ரசிகர்கள் தற்போதில் இருந்தே அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.