நடிகை விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் இந்த சிறுவன் யாரென்று தெரிகிறதா..? – இன்று பிரபல நடிகராக உள்ளார்..

தமிழ் சினிமாவில் விஜயசாந்தி அவர்கள் 1980ஆம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் என்னும் படம் மூலம் கோலிவுட் சினிமா துறையில் தனது பயணத்தை தொடர்ந்தார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் தெலுங்கு ஆகிய அணைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.விஜயசாந்தி அவர்கள் அன்று முதல் இன்று வரை பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பணியற்றியுள்ளார் இவர் படங்கள் அனைத்திலுமே இவருக்கு என்று ஒரு ஆக்ஷன் காட்சிகள் அந்த படத்தில் இருக்கும்.

நடிகை விஜயசாந்தி பக்கத்தில் தான் நிற்கும் புகைப்படத்தை அந்த சிறுவன் போட்டிருக்கிறார். ஆனால் இன்று அவர் சிறுவன் இல்லை. நாடே அறிந்த சினிமாப் பிரபலம். அவர் யாரென்று தெரிகிறதா!!இதைப்பற்றி ஒரு தகவல் சொல்கிறோம். இவர் தான் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் மகேஷ்பாபு. ஆண் ரசிகர்களை விட அதிகம் பெண் ரசிகர்களைக் கொண்ட இவர், 1989ல் நடிகை விஜயசாந்தியுடன் நடித்த தன்படத்தை இப்போது ஷேர் செய்துள்ளார்.

அதில் அவரோடு நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு . லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியோடு சேர்ந்து மீண்டும் நடிக்க இருக்கிறார் நடிகர் மகேஷ்பாபு. அன்று குழந்தை நட்சத்திரமாக சேர்ந்து நடித்த மகேஷ்பாபு, இன்று டோலிவுட்டின் மெகா ஸ்டாராக விஜயசாந்தியோடு சேர்ந்து நடிக்க இருக்கிறார்.