நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரா இது? உடல் எடையை குறைத்து ஆளே மாறிட்டாங்களே..! புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளுக்கென்றே ஒரு தனி இடம் உள்ளது. பெரும்பாலான வாரிசு நடிகர் நடிகைகள் சோபிக்காமல் போனாலும் சில நடிகர் நடிகைகள் தந்து தனித்துவமான நடிப்பினால் ஒரு தடம் பதிக்கின்றனர். அந்தவகையில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் நடிகர் சரத்குமாரின் மகள் என்பது எல்லாரும் அறிந்த ஒரு விஷயம்.

அந்த திரைப்படத்தில் போதுமான அளவு அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் அதன்பின் விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார் என பல திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார். பாலாவின் இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் மூலம் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வாங்கியுள்ளார். விக்ரம் வேதா படம் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது பம்பன், சேசிங், கலர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. நடிகை வரலட்சுமி நடிக்க வரும்பொழுது உடல் எடை கூடி கொஞ்சம் கு ண்டாக இருந்தார். இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது அவர்தான் என ஷா க் கா கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.