நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் சேர்த்த சொத்து மதிப்பு தெரியுமா? இவ்வளவு சம்பளமா!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தமிழ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாகி விட்டார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 60% சதவீதம் முடிந்து விட்ட நிலையில் மேலும் ஒரு பட வாய்ப்பு இவரை வந்தடைந்தது. ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும் முதலில் கமிட்டன இரு படங்களுக்கும் நடிகை லாஸ்லியா வாங்கிய சம்பளம் மட்டும் கிட்டத்தட்ட 25 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நடிகையான பின் பிக்பாஸ் லாஸ்லியா சுமார் ரூ. 50 லட்சம் வரை சொத்து சேர்த்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவை அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது என்றாலும் பல தரப்பில் இருந்து கூறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.