நடிகை லாஸ்லியாவா இது? மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகா..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லொஸ்லியா. தமிழ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் நடிகை லொஸ்லியா. இவர் பெயரை நிகழ்ச்சியின் போது சொல்லாத ரசிகனே இல்லை. தற்போது அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக் பாஸ் புகழ் லாஸ்லியா இப்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார் என்று கூறலாம். இந்த 3 படங்களுக்கும் மொத்தம், இவர் வாங்கிய சம்பளம் மட்டுமே சுமார் 50 லட்சம் கூறப்படுகிறது.

மேலும் படங்களில் மட்டுமல்லாமல், விளம்பரங்களிலும் மிகவும் ஆர்வமாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சோப் விளம்பரத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் லாஸ்லியா, தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

 

Leave a Reply

Your email address will not be published.