லட்சுமி மேனன் மலையாள திரைப்படமான ரகுவின்தே ஸ்வந்தம் ரஸியாவில் துணை வேடத்தில் அறிமுகமான பிறகு, இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். மேலும் இப்படத்தின் பாடல்கள் இவரை மிகவும் பிரபலமடையச் செய்தது. விஷாலுடன் பாண்டிய நாடு படத்திலும் இவர் நடித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துவந்த இவர் றெக்க படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்தார். இப்படத்திற்கு பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை. உடல் எடை அதிகரித்தநிலையில் சினிமாவில் இருந்து பின்வாங்கிய இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
ஆனால் அந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இதுவரை ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் வீட்டில் பரதநாட்டியம் நடனம் ஆடிக்கொண்டிருந்த நடிகை லட்சுமி மேனன் திடீரென தரையில் வழுக்கி கீழே விழும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. தரையில் தண்ணீர் இருப்பதை கவனிக்காததால் தவறி விழுந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.