கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இவருக்கு சுந்தரபாண்டியன் தான் முதல்படம். ஆனால் அதற்கு முன்பே கும்கி வந்துவிட்டது. சுந்தரபாண்டியனிலும் கோபக்கார பெண்ணாக அழகாக நடித்திருப்பார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த கும்கி படம் இவருக்கு வெற்றிகரமான படமாக அமைந்தது. பொதுவாக தமிழ் சினிமாவில் கொஞ்சம் குண்டாக இருக்கும் நாயகிகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு.
நடிகை குஷ்புவுக்கு கோயிலே கட்டியவர்கள் நம் திரைப்பிரியர்கள். அதேபோல் குண்டாக இருக்கும் ஜோதிகாவையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். அந்தவகையில் பார்க்கவே, கொழுக், மொழுக்கென்று இருந்த லட்சுமி மேனனுக்கும் தமிழில் ரசிகர்கள் அதிகம். கும்கி படத்தை தொடர்ந்து ஜிகிர்தண்டா, வேதாளம் என பல படங்களிலும் நல்ல நடிப்பைக் கொடுத்திருந்தார். பேஸ்அப் என்ற செயலி மூலம் எடுத்த புகைப்படத்தினை லக்ஷ்மி மேனன் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். அது மாத்திரம் இன்றி, இது லக்ஷ்மி மேனனா என்று வாயடைத்து போயுள்ளனர். அந்த அளவு அருமையாக உள்ளது. நடிகர்கள் மற்றும் அல்ல, தற்போதைய இளைஞர்களும் இதில் புகைப்படம் எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். டீனேஜாக இருந்த லக்ஷ்மி மேனன் சிறுமியாக மாறிய டிரெண்டாகும் புகைப்படம் மிகவும் அருமையாக உள்ளது.