நடிகை ரீமா சென்னிற்கு இவ்வளவு பெரிய மகனா? வெளியான குடும்ப புகைப்படம்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்

கோலிவுட் சினிமா துறையில் முதல் படத்திலேயே பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரீமா சென். இவர் தமிழ் சினிமா துறையில் மின்னலே படம் மூலம் அன்றைய ரசிகைகளின் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகரான மாதவன் அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தில் அறிமுகமாகி பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும் நடிகை ரீமா சென் அவர்கள் பிறகு தூள், பகவதி, வல்லவன் போன்ற படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவனின் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. அந்த படங்களின் மூலம் அதிக படியான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

நடித்துக்கொண்டே வந்த அவருக்கு மார்க்கெட் குறைய அவர் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் நடிகை ரீமா சென். அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *