நடிகை ராதிகாவுக்கு சரத்குமாருடன் காதல் மலர்ந்தது எப்படி? 20 வது திருமண நாள் கொண்டாடும் தம்பதி..!

நடிகர் சரத்குமாரும், நடிகை ராதிகாவும் இன்று தங்களது 20 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளான். சரத்குமாருக்கு ராதிகா இரண்டாவது மனைவியாவார். அதே போல ராதிகாவுக்கு சரத்குமார் மூன்றாவது கணவராவார். நடிகை ராதிகா இலங்கையை சேர்ந்தவர். நடிகர் எம். ஆர். ராதாவுக்கும் இலங்கையை சேர்ந்த அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் தான் ராதிகா.

அவர் கடந்த 1985 ஆம் பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்த நிலையில் அடுத்த ஆண்டே அவரை பிரிந்தார். பின்னர் லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை 1990 ஆம் ஆண்டு மணந்த ராதிகா அவரை 1992 ஆம் ஆண்டு வி வா கரத்து செய்தார். இந்த தம்பதிக்கு ராயான்னே ஹார்டி என்ற மகள் உள்ளார்.

இந்த சூழலில் ராதிகாவுடன் சரத்குமார் நட்பானார். பின்னர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போக காதலிக்க தொடங்கியுள்ளார். திருமணத்திற்கு முன்னர், இருவரும் சேர்ந்து ரகசிய போலிஸ், நம்ம அண்ணாச்சி, சூரியவம்சம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அப்போதே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இது பின்னர் காதலில் தொடங்கி திருமண பந்தத்தில் இருவரையும் இணைத்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!