நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்…

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பிறகு, நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியாகக் கதாநாயகியாக நடித்த, நடித்து வரும் நடிகை என்றும் ரம்யா கிருஷ்ணன் வரலாறூ படைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் ராஜமதவாக நடித்து இந்தியா அளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் குயின் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் அப்புகைப்படத்தில் இருக்கும் தனது இரண்டு பெரியம்மாகளும் தற்போது உயிருடன் இல்லை என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.