நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் யாரு தெரியுமா? அவரும் ஒரு பிரபல இயக்குனர் தான்!! புகைப்படம் உள்ளே

நீலாம்பரியாக மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தற்போது ராஜா மௌலியின் பாகுபலி படத்தில் நடித்து ராஜமாதாவாகவும் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டார். படிக்காதவன், பேர் சொல்லும் பிள்ளை படங்கள் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமாக துவங்கியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதன்பின் அம்மன், போட்டு அம்மன், ராஜகாளி அம்மன் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆனால் ரஜினி நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்து நீலாம்பரி கதாபாத்திரம் இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடும் ரம்யா கிருஷ்ணனுக்கு நிகர் ரம்யா கிருஷ்ணனே தான். என்ன தான் இன்றைய நடிகைகள் அசத்தினாலும் அவரது இடத்தை பிடிப்பது என்பது முடியாத காரியம் தான்.


80களில் சினிமாவிற்கு வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணா வம்சி என்பவரை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணா வம்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *