தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் மீனா மற்றும் ரம்பா.இருவருமே பல பிரபல நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கியுள்ளனர். இந்நிலையில் நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

இருவரின் மகள்களும் சீக்ரட்டாக பேசிக்கொள்ளும் க்யூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ”இது அவர்களின் ரகசியங்கள்” என கமெண்டில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் ரம்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மீனா, இந்த புகைப்படம் 2018-ஆம் ஆண்டில் அமெரிக்கா டூர் சென்ற போது எடுக்கப்பட்டது எனவும் மீனா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரம்ப தொழிலதிபரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.