நடிகை மைனா நந்தினி – யோகேஸ்வரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு! மகிழ்ச்சியில் வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. இவரின் நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். மைனா என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதால் ‘மைனா’ நந்தினி என்று அழைக்கப்படுகிறார். அதற்குப் பிறகு ‘சின்ன தம்பி’, ‘அரண்மனைக் கிளி’ உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்தார். இவர், சினிமாவில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து வம்சம், ராஜா ராணி, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார் நந்தினி. இவருக்கும், நடிகர் மற்றும் நடன இயக்குநராக யோகேஸ்வரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. யோகேஸ்வரன் – நந்தினி தம்பதியினர் டிக் டாக் வீடியோக்களில் மிகவும் பிரபலம். சில மாதங்களுக்கு முன்பு நந்தினி கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு நந்தினிக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், போட்டோ ஷூட் படங்கள் என மிகவும் வைரலாயின. இந்நிலையில், யோகேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.