நடிகை மீனா படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பாலா.. எந்த படத்தில் தெரியுமா? வெளியான புகைப்படம்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கப்பட்டது. இப்படி முதல் சீசனில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியின் மீது விருப்பம் இல்லாதவர்கள் கூட கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்றதும் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். பல பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த முதல் சீசன் பல சர்ச்சைகளையும் எதிர்புகளையும் மீறி மிகப்பெரிய வெற்றியடைந்தது என்றே சொல்ல வேண்டும்.

 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று நேற்றுடன் நிறைவடைந்தது, மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆரி 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பெரிய வெற்றியை அடைந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் பாலாஜி முருகதாஸ் 6 கோடியே 14 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகியுள்ள பாலாஜி முருகதாஸ், பிரபல நடிகை மீனாவுடன் ஒரு நடித்துள்ளார். ஆம் கரோலின் காமாக்ஷி என்ற திரைப்படத்தில் பாலாஜி முருகதாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *