தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மீனா. ரஜினி நடிப்பில் வெளியான அன்புடன் ரஜினி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனா. இதன்பின் சில ஆண்டுகள் கழித்து இளம் கதாநாயகியாக அறிமுகமாகி, ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார்.

என் ராசாவின் மனசிலே, முத்து, ராஜகுமாரி, வீரா, நாட்டாமை போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் திருமணத்திற்கு பின் நடிப்பைதை நிறுத்திவிட்டார். ஆனால் இவரை தொடர்ந்து இவரின் மகள் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்துவிட்டார். தளபதி விஜயின் தேறி படத்தில் குழைந்தை நட்சித்திரமாக நடித்து இருக்கிறார். இந்நிலையில் 44 வயதில் முழு மேக்கப்புடன் நடிகை மீனா புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..