நடிகை மாளவிகா மோகனனின் அம்மாவா இது..! இருவரும் இணைந்து வெளியிட்ட புகைப்படம் – இதோ!!

தமிழ் சினிமாவில் தற்போது திரைப்படங்களில் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிரபல மொழிநடிகைகளே பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதிலும் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட பல நடிகைகள் தான் அதிகளவில் தமிழ் சினிமாவில் நடித்து வருவதோடு முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பேட்ட.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்தது. இந்நிலையில் இந்த படத்தில் சசிகுமார், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம், த்ரிஷா, சிம்ரன், மெகா ஆகாஷ் என முன்னணி நடிகர் பட்டாளமே நடித்து இருந்தார்கள்.

மேலும் இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் பிரபல நடிகை மாளவிகா மோகனன். இந்நிலையில் இவர் இந்த படத்தில் சசிகுமாரின் ஜோடியாகவும் மேலும் வயதான அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

ஆனால், சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட்டான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ரஜினி, விஜய்யை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஆம் கார்த்திக் நரேன் மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!