நடிகை ப்ரியா ராமனின் முன்னாள் கணவர் ரஞ்சீத்தின் இரண்டாவது மனைவி யார் தெரியுமா..? வெளியான திருமண புகைப்படம் இதோ..

1993 ஆம் ஆண்டு, இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்த ‘வள்ளி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா ராமன். மேலும், இந்த படத்திற்கு பிறகு, சூரிய வம்சம் படத்தில் நடித்தார். இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின் வரிசையாக பல படங்களில் நடிக்க கமிட் ஆனார். ‘நேசம் புதுசு’ படத்தில் நடிகர் ரஞ்சித்துடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “செம்பருத்தி” சீரியலில் அகிலாண்டேஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை ப்ரியா ராமன், நடிகர் ரஞ்சீதை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் 15 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2014ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவாகரத்து பின் நடிகை ப்ரியா ராமன் திருமணம் செய்துகொள்ள வில்லை என்றாலும், நடிகர் ரஞ்ஜீத் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரஞ்ஜீத்தின் இரண்டாவது திருமணமும் ஒரு வருடத்தில் விவகாரத்தில் முடிந்தது.நடிகர் ரஞ்சீத்தின் இரண்டாவது திருமணம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது, இதோ அந்த புகைப்படம்…