நடிகை ப்ரியா பவானி சங்கரின் காதலர் இவர் தானா..! பிறந்தநாள் வாழ்த்து கூறி அவரே வெளியிட்ட புகைப்படம்

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களை கவர்ந்த பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கினார்.தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலம் நடிகையாக காலடி பதித்தார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதையடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகினார். மாஃபியா, மான்ஸ்டர், பொம்மை என போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸுடன் ருத்ரன் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து நடித்ததை வைத்து கிசுகிசுக்களிலும் சிக்கினார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதை முற்றிலும் தவிர்த்த பிரியா பவானி சங்கர் ராஜ்வேல் என்பவரை காதலிப்பதாக சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டு காதலரை அறிமுகப்படுத்தினார். தற்போது காதல் ஏற்பட்டு 10 வருடங்கள் ஆகி நமக்குள் எந்த மாற்றங்கள் ஏற்படவில்லை என்று வசனம் வசனமாக பேசியுள்ளார். இதை ஜூஸ் குடிப்பது போன்று இருக்கும் புகைப்படத்தோடு இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.