பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பின்னர் ஜோடி நம்பர் ஒன், மற்றும் கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் வைபவ் நடித்த மேயாத மான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியா பவனி ஷங்கர்.

இப்படத்தினை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாபியா மற்றும் மொன்ஸ்டர் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியாமான, நடிகை என்றால் அது பிரியா பவானி சங்கர் தான். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இரண்டில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் தமிழிலும் இவரின் படங்களின் ரிலீஸ் காத்துகொண்டு இருகிறது. நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது காதலருடன் சண்டை போடும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலரைப் பிரிந்து தனியாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது எங்கள் காதல் முறிந்து விடவில்லை எனும் அப்படியெல்லாம் என்பதை போல மீண்டும் இருவரும் ஜோடியாக வலம் வந்தனர்.