நடிகை பாவனாவின் கணவரை பார்த்துள்ளீர்களா? வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்

நடிகை பாவனா தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர். சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பாவனா. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான தீபாவளி, வெயில், கூடல் நகர் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியது. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழியிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் நம்மால் என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் நடிகை பாவனா. இதுவரை 80 மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை பாவனா. மேலும் இவர் கடைசியாக தமிழில் தல அஜித்துடன் அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார், பின்னர் மீண்டும் அவர் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட திரைப்பட இயக்குனர் நவீனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வரும் பாவனா, ஒரு சில கன்னட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் தற்போது அவரின் கணவர் நவீன் உடன் அவர் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published.