நடிகை நிவேதா தாமஸ் சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க..! இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

நடிகை நிவேதா தாமஸ், சினிமாவில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு சில முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் படத்திலேயே இவர் கேரள ஸ்டேட் விருதை பெற்றுள்ளார். தற்போது நடிகைகள் தங்களது சினிமா துறையில் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் பாடு பட்டு வருகிறார்கள்.நடிகை நிவேதா தாமஸ் அவர்கள் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான போ ராளி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

பின்பு இவருக்கு படிப்படியாக படங்களின் வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த மூஸா எனும் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நடிகை நிவேதா தாமஸ். இதன்பின் விஜயின் குருவி உள்ளிட்ட சில படங்களிலும் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனால் ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் இவரை பிரபலமான நடிகையாக தமிழில் மாற்றியது.

தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார் நடிகை நிவேதா தாமஸ். இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகை நிவேதா தாமஸுடன், அவரது தம்பியும் இருக்கிறார்.இதோ அந்த புகைப்படம்…