நடிகை நிரோஷாவின் கணவரும் ….90களின் முண்ணனி நடிகருமான ராம்கி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

முன்பெல்லாம் ராம்கி கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருந்தன. தமிழ்த்திரையுலகில் 1990 களின் முக்கிய ஹீரோவாக நடிகர் ராம்கி வலம்வந்தார். அவர் இப்போது எப்படி இருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ராம்கி, கடந்த 1987ல் வெளியான ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். வனஜா கிரிஜா, மாயாபஜார், செந்தூரப்பூவே என பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லாமல் போனார். இதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்பு ‘பிரியாணி’  மற்றும் மாசாணி படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.

நடிகர் ராம்கியை நடிகராகவே நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் சிறந்த ஜோதிடரும் கூட. இதை முன்பு ஒருமுறை பிரபல தொலைக்காட்சிக்காக பெப்ஸி உமா செய்த நேர்காணலின்போது சொன்னார். ஜோதிடத்தை ராம்கி அறிவியல்ரீதியாக் கற்று உள்ளார். எலெக்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும் அதிக ஆர்வம்கொண்ட ராம்கி டெக்னிக்கல் விசயத்தில் கூட வல்லுவர்.அவர் தனது தனித்துவமான ஹேர் ஸ்டைலால் நன்கு அறியப்பட்டவர், அதை இன்னும் பராமரிக்கிறார்.ராம்கி நடிகை நிரோஷாவை மணந்தார்.வெள்ளித்திரையில் அதிகம் தலைகாட்டாத ராம்கி, முழுக்க நரைமுடியோடு இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

Leave a Reply

Your email address will not be published.