பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகனவர் நடிகர் நகுல். 2003ஆம் ஆண்டு முன்னனி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் வெற்றியும் பெற்றது. நகுல் பிரபல நடிகை தேவயானியின் தம்பி ஆவார். அடுத்ததாக 2008ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தமிழ் திரையுலகில் தேடித்தந்தது.
அதனைத்தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்த நகுல் யுவன், ஹாரிஸ், தமன் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களையும் பாடி பின்னணி பாடகராக வலம் வந்தார். மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது 35-வது பிறந்தநாளன்று தன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் நகுல் – ஸ்ருதி தம்பதினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திறைதுறையை சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.